அறிமுகம்
வலைப்பதிவு உலகத்திற்குள் இன்று வலது கால் வைக்கிறேன்.
இந்தத் தலைப்பு வைக்கும்போதே எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அரிஸ்டாட்டில் ஒருமுறை கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தாராம். ஒரு சிறுவன் கடல் நீரை ஒரு கரண்டியில் அள்ளி கொஞ்சம் தள்ளி ஊற்றிக் கொண்டிருந்தானாம். என்ன செய்கிறாய் என்று அரிஸ்டாட்டில் கேட்க கடலை அளக்க முயற்சி செய்கிறேன் என்றானாம். அரிஸ்டாட்டில் சிரிக்க அந்தப் பையன் சொன்னானாம் 'ஏன் இந்த சிறிய மூளையை வைத்து நீங்கள் இந்த பிரமாண்டமான உலகை அளக்க முற்படும் போது நான் ஏன் இந்த கரண்டியை வைத்து கடலை அளக்க முடியாது' என்று கேட்க அதிர்ச்சி அடைந்து வெட்கினாராம் அரிஸ்டாட்டில்.
உலகைப் புரிந்து கொள்ளும் முயற்சியும் அது போலத்தான். இருந்தாலும் எண்ணங்களுக்கு ஏது அணை. என் கருத்துக்களையும் போடுகிறேன். கருத்துக்கள் வந்தால் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'. இல்லை என்றால் 'கடை விரித்தேன், கொள்வாரில்லை'. எது நடந்தாலும் 'அது நன்றாகவே நடந்தது'.அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment