Friday, January 13, 2006

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

SMS அனுப்பியாச்சு Mail
Send பட்டன் கிளிக்கியாச்சு
ஆளுக்காளு கைகுலுக்கி
வாழ்த்து படலம் தொடங்கியாச்சு.

டிவியிலே நடிகரெல்லாம்
பொங்கல் கொண்டாடுறார்
தன் படத்தை பார்க்க சொல்லி
தம்பட்டம் அடிக்கிறார்.

பொங்கலுக்கு கொடுக்கறான்யா தள்ளுபடி
மொய்க்கிற கூட்டத்திலே விவசாயி கண்டுபிடி
விவசாயி கொண்டாடும் பண்டிகைக்கு
ஏசிக்கும் காருக்கும் தள்ளுபடி தான் எதுக்கு?

உழுதவன் கணக்கெடுத்தால் உலக்கு கூட மிச்சமில்லை
கொண்டாட வேண்டியவன் குழம்புறான்
ஆபிசில் சில நாள் லீவு கிடைக்குது
இங்கே கொண்டாட பண்டிகையை தேடறான்.

நோக்கம் இங்கே யாருக்கு அவசியம்
சொகுசுக்கு தான் எல்லோருக்கும் அவசரம்
யாரை சொல்லியும் இங்கே குத்தமில்லை
ஆண்டவனும் கூட இதில் சுத்தமில்லை.

பொங்கலையும் கொண்டாடும் முறையிருக்கு
நம்ம கிராமத்தில் தான் அதன் முடிச்சிருக்கு
கிராமங்கள் இங்கே நூறிருக்கு
அங்கே தான் நம்மோட வேரிருக்கு.

வேருக்கும் விளை நிலத்திற்கும்
இயற்கைக்கும் அதன் கருணைக்கும்
ஏரில் பூட்டும் மாட்டிற்கும் ஓட்டும் விவசாயிக்கும்
நன்றி சொல்லும் நல்ல நாளிது.

சுத்தி பத்து கிலோமீட்டர் தாண்டினா
எந்த பக்கம் பார்த்தாலும் நம்ம ஊரு தானுங்க
நம்ம சந்தையிலே மேக்கப் போட்டு நிற்பதெல்லாம்
அங்கே விளைஞ்சது தான் என்பதையும் மனசில் வையுங்க.

விஞ்ஞானம் வளர்ந்தாலும் நாட்டிலே
நம்ம விவசாயி தான் இன்னும் ரோட்டிலே
சுழன்றும் ஏர்பின்னது உலகம்
இதை புரிஞ்சாக்கா இங்க ஏது கலகம்.

ஊடகம் எல்லாம் உற்சாகம் காட்டறான்
உழைப்பவன் மட்டும் தான் கஷ்டத்தில் மாட்டறான்
குடும்பத்தில் உற்சாக அரும்பு
அதுதான்யா அவன் வேண்டும் கரும்பு.

கொம்பு சீவிய மாட்டை பார்த்து அவன்
கொஞ்சம் கூட மிரண்டதில்லை
தலை முங்க வரும் கடந்தான் அவனை
தலை சுற்ற செய்யுதுங்க.

நாம் உண்பதெல்லாம் அவருழைப்பு
என்பதனை தான் மறந்தால்,
செய்ந்நன்றி கொன்றால் உய்வில்லை எனும்
தெய்வமொழி மறந்த கதையாகாதோ?

கடனில் மூழ்கிய விவசாயி எல்லாம்
கரை சேர்ந்து வாழட்டும்
விவசாயி தற்கொலை செய்தி விரைவில்
வழக்கொழிந்து போகட்டும்.

ஊரெல்லாம் மகிழ்ச்சி பூத்திருக்க
குடும்பமும் கொண்டாடி களித்திருக்க
வெல்லமிட மறந்தாலும் பொங்கல் இனிக்கும்,
கை கொண்ட கரும்பும் பல் காட்டிச் சிரிக்கும்.

இது தமிழர் மட்டும் கொண்டாடும்
தமிழர் திருநாள் அல்ல,
உழவரும் உழவார்ந்த உலகரும்
கொண்டாடும் உழவுத் திருநாள், உலகத் திருநாள்.

உலகத் தமிழர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

6 comments:

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

ஞானவெட்டியான் said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

பரஞ்சோதி said...

உங்களுக்கும், குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

Anonymous said...

hi wonder how u write it in tamil ;)
let us know i would love to blog in languages iknow too !

Anonymous said...

aazhamaana chindikka vaikkinRa kavidai...